இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் ரவிகரன் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (12்.5.2026) முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இச்சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பிராந்தியத்தில் நிலவும் நிலஆக்கிரமிப்புக்கள், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார நிலமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும் இதன்போது முள்ளிவாய்கால் கஞ்சி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முறையற்ற செய்திகள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை




முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan