கபிலவின் மரணம் குறித்து நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல் !
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பதைக் கண்டறிவதற்கு சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரது மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கபில சந்திரசேன கதவிற்கு இடையில் காணப்பட்ட இடைவெளியில் உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் பட்டியைப் பயன்படுத்தி தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆனால் அந்தக் கதவில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கபில சந்திரசேன உயரமான நபர்.இந்த நிலையில் கதவிற்கு இடையில் காணப்பட்ட இடைவெளியில் எவ்வாறு அவர் பட்டியைப் பயன்படுத்தி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தநிலையில்,குறித்த கதவில் கபில சந்திரசேன அதாவது ஒரு பாரம் தொங்கியதற்கான ஆதாரங்கள் இல்லையென ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! கைபேசியில் கடவுச்சொல்லாக பதியப்பட்ட முகம் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam