நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் 5 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணியுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
எனினும், மருத்துவ இரசாயனவியலாளர்கள் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தொடர்ந்து அந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரப் பிரச்சினைகள், பதவி உயர்வுகளில் தாமதம், சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் நேற்று முன்தினம் (05) காலை 8 மணிக்கு ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.
தீர்மானம்
இந்த பணிப்புறக்கணிப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக வந்திருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் கூடிய நிறைவுகாண் மருத்துவ நிபுணர் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தை அடுத்து நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
