யாழ் - செம்மணி மனித புதைகுழியில் இதுவரை பல மண்டையோட்டு தொகுதிகள் மீட்பு
யாழ் - செம்மணி மனித புதைகுழி ஆரம்பகட்ட ஆய்வானது இன்றைய தினத்துடன் (7) நிறைவடையவுள்ளது.
இதுவரை 17- 18 மண்டையோட்டு தொகுதிகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் 5 முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக ஆய்வு
இதேவேளை தொல்பொருள் துறை பேராசிரியர் ராஜ் சோம தேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அபிப்பிராய அறிக்கையில் குறித்த பிரதேசத்தை தாண்டியும் குற்றபிரதேசம் என சந்தேகிக்கப்படும் பிரதேசம் இருக்கலாம் என்ற அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கையின் அடிப்படையில் மேலும் 45 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கபடவேண்டும் என்ற கோரிக்கையை சட்டவைத்தியை அதிகாரி மன்றில் முன்வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 45 நாட்களுக்கு மேலதிக ஆய்வை மேற்கொள்ளவதற்கான நிதி பாதீட்டினை உடனடியாக மன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளை ஒன்றினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
