அரசாங்க மருத்துவமனைகள் பாரிய நெருக்கடியில்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka National Health Service
By Aanadhi Jun 25, 2023 07:23 AM GMT
Report

அரசாங்க மருத்துவமனைகளின் சிகிச்சை மற்றும் மருந்து வழங்கல் சேவைகள் எதிர்வரும் வாரங்களில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளது.

தற்போதைய ஓய்வூதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் 60 வயதை கடந்த பெருமளவான வைத்தியர்கள் இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளனர்.

மறுபுறத்தில், மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்குப் போதுமான நிதி ஒதுக்கப்படாமை காரணமாகவும் அரசாங்க மருத்துவமனைகளின் செயற்பாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவமனைகள் பாரிய நெருக்கடியில் | Medical Crisis In Sri Lankan Hospitals

மருத்துவர்களுக்கான வயது வரம்பு

மருத்துவர்களின் பணி வயது 60 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதால், இருநூறு விசேட மருத்துவ நிபுணர்கள், இருநூறு பொது மருத்துவர்கள், அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மருத்துவர்கள் 250, 50 பல் மருத்துவர்கள் ஆகியோர் இம்மாதம் 30 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களில் 650 பேர் பிராந்திய மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களில் சுமார் 350 பேர் இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமையினால் அந்த மருத்துவமனைகளை தொடர்ந்தும் இயக்குவது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க மருத்துவமனைகள் பாரிய நெருக்கடியில் | Medical Crisis In Sri Lankan Hospitals

இவ்வாறான நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, மருத்துவர்களுக்கான வயது வரம்பை 63 ஆக நீட்டித்து இடையில் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது, பின்னர் அரசாங்கத்தின் பொதுவான கொள்கை முடிவின் அடிப்படையில் குறித்த சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டது.

புதிய சுற்றறிக்கையை இரத்து செய்யவும், வயதை 63 ஆக உயர்த்தும் சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் விசேட மருத்துவ நிபுணர்கள், பொதுமருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசாங்க மருத்துவர்கள் அடங்கிய குழு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

தற்போது அது நீதிமன்றத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.

வெளிநாடு 

இதேவேளை, பயிற்சியை நிறைவு செய்த சுமார் 1400 வைத்தியர்களுக்கு கடந்த ஏப்ரலில் பயிற்சியின் பின்னரான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.

அரசாங்க மருத்துவமனைகள் பாரிய நெருக்கடியில் | Medical Crisis In Sri Lankan Hospitals

எனினும், சுமார் 300 வைத்தியர்களுக்கு நியமனக் கடிதங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அறியமுடிகின்றது.

குறித்த நியமனத்தை ஏற்காத பலர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

மருந்து தட்டுப்பாடு 

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவமனைகள் பாரிய நெருக்கடியில் | Medical Crisis In Sri Lankan Hospitals

அதன் காரணமாக தொடர்ச்சியாக கிளினிக்குகளுக்குச் சென்று, சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால், இருதய அறுவை சிகிச்சைகளை கூட நிறுத்தப்பட்டுள்ளதாக நோயாளிகள் கூறுகின்றனர்.

மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தாவிடம் ஊடகங்கள் வினவியபோது அவரும் நிலைமை பெரும் நெருக்கடியில் இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US