யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி
யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் அவரது சகோதரியால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த வைத்திய தம்பதிகள் தனது அக்காவை வெளிநாடு அனுப்புவதாக கூறி இரண்டு வருடங்களாக கம்போடியா நாட்டில் தடுத்து வைத்துள்ளனர்.
மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டு
எனது அக்காவை போன்று மேலும் பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் தாங்கும் உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்காத காரணத்தினால் பலர் அடிமைகளாக அங்கு வேலை செய்வதாக தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்திய தம்பதியினர் நீர்கொழும்பில் வசிக்கும் இன்னுமொரு தரப்பினர் ஊடாக ஆட்களை திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனது அக்காவை போன்று மேலும் பலர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்திய தம்பதியினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கோரிக்கை முன் வைத்துள்ளார்.