முதியோர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவை
தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தம்பலகாமம் தெற்கு முதியோர்களுக்கான உளநலம் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பிலான விழுப்புணர்வும் யோகா பயிற்சியும் இன்று (24.06.2026) வழங்கிவைக்கப்பட்டது.
தம்பலகாமம் கிராம சேவகர் கட்டிடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை தம்பலகாமம் பிரதேச செயலகம் மாற்றும் முதியோர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் வளவாளர்களாக கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழாம் இணைந்து திறம்பட யோகா பயிற்சி உடல் ஆரோக்கியம், உணவுப்பழக்கங்கள் தொடர்பிலான விடயங்களை தெளிவூட்டினர்.
முதிர்ச்சியடைவதை ஆயுர்வேத வைத்திய முறையில் குறைத்து நோயற்ற ஆரோக்கியமானவர்களாக வாழ முடியும் என்றும் உடற்பயிற்சி மூலமான ஆரோக்கியம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், முதியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்