நுவரெலியா - வலப்பனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாம்
மண்சரிவு காரணமாக வலப்பனை தேசிய இளைஞர் படையணி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள வலப்பனை, ஹரஸ்பெத்த வத்துமுல்ல மேற்பிரிவு, தியனெல்ல தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்காக இலவச வைத்திய முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த முகாமில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் அதிகமானவர்கள் கிளினிக் செல்ல முடியாத காரணத்தினாலும் அவர்களுக்கு திடீர் சுகயீன நிலைமைகள் காணப்பட்டதையடுத்து குறித்த இலவச வைத்திய முகாம் இன்று (31.12.2025) நடத்தப்பட்டுள்ளது.
இலவசமாக வழங்கப்பட்ட மருந்து
இதில் நுவரெலியா ஆதார வைத்தியசாலைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், மருந்து வழங்குனர்கள் உட்பட பலர் இணைந்து இந்த வைத்திய முகாமினை நடத்தியுள்ளனர்.

இந்த முகாமில் தங்கியுள்ள அனைவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி அனைவருக்கும் இலவசமாக மருந்தும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |