இந்த நோய்க்குறி இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடவும்! - சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்
எவருக்கேனும் சளிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருந்தால் அவர் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டுமென சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
காய்ச்சல், இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியமானது என பொதுச்சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொவிட் நோய்த் தொற்றாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பீ.சீ.ஆர் இயந்திரங்களில் கோளாறு, ஆளணி வளப் பற்றாக்குறை என்பனவற்றினால் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நோய் அறிகுறிகள் உடையவர்களில் அநேகமானவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.