கொலையாளிகள் சுதந்திரமாக இருக்கும் இலங்கையில் ஊடக சுதந்திரம் மிகக் குறைவு

ஊடகவியலாளர்களின் படுகொலைகளை தண்டிக்காமல் தொடர்ந்து நழுவிச் செல்லும் போக்கானது, இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஒரு பெரிய தடையாக இருப்பதை, ஊடக சுதந்திரத்திற்காக செயற்படும் ஒரு அமைப்பு மே 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திரத் தினத்தில் உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் (JDS) அமைப்பின் இணை அமைப்பான, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (RSF) 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்த வருடமும், கடந்த வருடத்தைப் போன்று 127ஆவது இடத்தில் சிவப்பு வலயத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்தது 44 என இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு சேகரித்த தகவல்களை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு மேற்கோளிட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு தண்டனை விதிக்கப்படாமை இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் தடையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சுற்றிவளைப்புகள், விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான பொலிஸ் துன்புறுத்தல் அலை வீசத் தொடங்கியுள்ளதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கூறியுள்ளது.

"உள்நாட்டுப் போரின் முடிவு மற்றும் தமிழ் கிளர்ச்சியை நசுக்கிய 10ஆவது ஆண்டு நிறைவான 2019ஆம் ஆண்டு, இலங்கையில் சிறுபான்மையினர் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு 2020ஆம் ஆண்டில் பலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடம் நவம்பரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புகைப்பட ஊடகவியலாளர் கோகுலன் என அழைக்கப்படும் முருகபிள்ளை கோகுலதாசன் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

அதே மாதத்தில் முல்லைத்தீவில் ஏற்பட்ட பேரழிவை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கனபதிபிள்ளை குமணன் ஆகியோர் காட்டில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர், அதேவேளை, குற்றவாளிகள் பொலிஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் பாதுகாக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கிழக்கில் இருந்து வடக்கு நோக்கிச் சென்ற பேரணியின் பின்னர், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்யமூர்த்தி சஷிகரன் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த வருடம் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட யூடியூப் தளத்தின் முகுந்தன் சிவன்யா மற்றும் விமல்ராஜ் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் கைது செய்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.

குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் மார்ச் மாதம் சித்திரவதை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுஜீவ கமகே அளித்த வாக்குமூலத்தை வலுக்கட்டாயமாக மாற்றியமைத்ததாக பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் 2021 சர்வதேச குறியீட்டின்படி, நோர்வேயில் ஊடக சுதந்திரம் சிறப்பாக காணப்படுவதாகவும், வட கொரியா மிகமோசமான பெறுபேற்றை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு மோகனதாஸ் சோதிலிங்கம்

கோப்பாய், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு அருணாசலம் சேனாதிராஜா

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு காந்தன் செல்வராசா

நீர்வேலி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கந்தசாமி பூங்காவனம்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை கந்தையா

வவுனியா, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி வினிபிறட் கந்தையா

யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தங்கவேல் கதிரிப்பிள்ளை

குப்பிளான், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ராஜசுந்தரம் பாலசுப்பிரமணியம்

சுழிபுரம், Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி பரம்சோதி கமலாதேவி

இளவாலை சிறுவிளான், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சண்முகம் ஜெகநாதன்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை

தாவடி, Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி பரநிருபசிங்கம் வரதலட்சுமி

நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா தேவராசா

நீர்வேலி மேற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி விக்னராஜா

நல்லூர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு அற்புதராஜா தியாகராஜா

மானிப்பாய், Sri Lanka

13ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முத்துவேலு தேவலிங்கம்

புளியங்கூடல், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி மேரி மில்ரெற் அரியமணி பிரான்சிஸ்

மிருசுவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இளையதம்பி இராசமணி

குரும்பசிட்டி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கதிரவேலு லோகப்பிரகாஸ்

தெல்லிப்பழை, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி குணமணி தங்கமணி

Anaipanthy, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நவரட்ணம் அனுவலோகன்

பூநகரி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு இலகுநாதன் பொன்னம்பலம்

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் நவரத்தினம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தனலட்சுமி பரம்சோதி

வேலணை புளியங்கூடல், Sri Lanka

நன்றி நவிலல்

திரு நடராஜா சிவராமலிங்கம்

உடுப்பிட்டி, Sri Lanka

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி இரத்தினம் அன்னலட்சுமி

அரியாலை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு செல்வரெத்தினம் செல்வகுமார்

புன்னாலைக்கட்டுவன், Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி மகேஸ்வரி அருமைநாயகம்

அல்லைப்பிட்டி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி மோகநாதன்

திருகோணமலை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பிரான்சிஸ் சேவியர் நீக்கிலஸ்

யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தனபாலசிங்கம் குமாரசாமி

மலேசியா, Malaysia

மரண அறிவித்தல்

திரு கார்த்திகேசு பஞ்சரட்ணம்

அல்வாய், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சிவபாதம் மங்கயற்கரசி

மலேசியா, Malaysia

மரண அறிவித்தல்

திரு சுப்பையா விவேகானந்தன்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சாரதாம்பாள் நுட்பநாதன்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி செல்லத்தம்பி அமிர்தமலர்

இலங்கை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கிறீஸ்துராசா யேசுதாசன்

குருநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு குழந்தைவேலு சற்குணானந்தன்

உரும்பிராய் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சாமிநாதன் சாந்தகுமார்

கொக்குவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு முருகேசர் நடராஜகுமாரன்

மாதகல், Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி புஸ்பராணி இளங்கோவன்

ஏழாலை மேற்கு, Sri Lanka

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US