மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு அச்சப்படும் அரச சார்பு அரசியல் பிரபலங்கள்
மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களை கண்டு சில அரசாங்க சார்பு அரசியல்வாதிகள் அச்சப்படுவதன் காரணமாகவே மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் குற்றச்சாட்டு சுமத்துகின்றார்கள்.
மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் என்கின்ற ரீதியில் இந்தஊடக அடக்குமுறைக்கான முழுப் பொறுப்பையும் இராஜாங்க அமைச்சர் சிவனேசததுறை சந்திரகாந்தனே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு, தென்னிலங்கையில் இருந்து வரும் அமைச்சர்களிடம் ஊடகவியலாளர்கள் பயமின்றி கேள்வி எழுப்புவதனால், ஊடகவியலாளர்களை மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு தவிர்ப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்குமாறு தமக்கு அழுத்தங்கள் இருப்பதாக மட்டக்களப்பு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
அழுத்தம் கொடுக்கவில்லை
இராஜாங்க அமைச்சரின் தரப்பை தொடர்புகொண்டு கேட்ட போது அவ்வாறு எந்த அழுத்தமும் தமது தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, தற்போது இலங்கையில் 30ற்கும் மேற்பட்ட ஊடகங்கள் உள்ளன.
அப்படி இருக்க, ஒரு மாவட்டத்தில் ஐந்து ஊடகங்களுக்கு மாத்திரமே தகவல் திணைக்களம் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டைகளை கொடுக்கின்றது.
அதிலும் அரசாங்கம் சார்ந்த ஊடகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
தகவல் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படும் ஊடகங்கள் மாத்திரம் செய்தியை வெளிகொண்டுவரும் நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுவதால், மக்கள் சார்ந்த பல ஊடகங்கள் புறக்கணிக்கப்படுகின்ற ஒரு நிலை உருவாகியுள்ளதாக மட்டக்களப்பு ஊடகவியலலார்கள் குற்றம்சுமத்துகின்றார்கள்.
ஏன் அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுமார் 15 ஊடகங்களுக்கு இருக்கைகள் கொடுத்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர் என கேள்வியையும் எழுப்புகின்றார்கள்.
குறிப்பாக இலங்கையில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி காரணமாக பல அரச அலுவலகங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளன.
இதற்கமைய தகவல் திணைக்களம் அடையாள அட்டைகளை அச்சிடுவதிலும் காலதாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவை எதுவுமே தெரியாத மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தான் அழைத்துவரும் அமைச்சர்களிடம் துணிகரமாக கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என்ற அடிப்படையில் இவ்வாறான ஆலோசனையை வழங்கி உள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சம்பவங்கள் கொள்ளை சம்பவங்கள் மற்றும் காணி அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட அவிருத்தி குழு கூட்டத்தில் இடம்பெறும் அனைத்து வாதங்களையும், குற்றச்சாட்டுக்களையும் மக்களின் பார்வைக்கு கொண்டுசென்றதன் காரணமாக ஊடகவியலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடுதான் அவரது இந்த நடவடிக்கை என்று கூறுகின்றார்கள் ஊடகவியலாளர்கள்.
மட்டக்களப்பை பொறுத்தவரையில் பல ஊடகவியலாளர்கள் உரிமைக்காக குரல் கொடுத்து உயிரை இழந்துள்ளனர்.
சுமார் 17 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படட ஒரு இடமாக மட்டக்களப்பு உள்ளது.
ஊடகவியலாளர்களை அப்பட்டமாக கொலை செய்து கைகளில் இரத்தக்கறை நடமாடி திரிந்தவர்களின் அடக்குமுறைக்குள் ஊடகங்களை மறுபடியும் கொண்டுவர எத்தனிப்பது அங்குள்ள ஊடகவியலாளர்களை அச்சப்படுத்துகின்றது.
சமாதான காலம் என்று கூறப்படுகின்ற இந்தக் காலத்திலும் ஏதோ ஒரு தொணியில் ஊடகவியலாளரை அச்சுறுத்துவதும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே இருக்கின்றது.
இலங்கையில் பொதுவாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவது வழக்கம். மாவட்டத்தின் நலன் சார்ந்து, மாவட்டத்தின் எதிர்காலம், அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் விடயங்கள் சார்ந்தும் அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்படும்.
ஊடகங்களின் பங்களிப்பு அரசாங்க அதிகாரிகளால் அரசியல்வாதிகளால் சொல்ல இயலாத, செய்ய இயலாத பல விடயங்கள் உள்ளன. அவற்றை ஊடகங்கள், மக்கள் மற்றும் மேல் அதிகாரிகள் உட்பட அரசாங்கத்திற்கு கொண்டு சேர்க்கின்ற ஒரு பொறிமுறை உள்ளது.
அதற்காக தான் அனைத்து ஊடகங்களும் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அழைக்கப்படுகின்றன.
ஆனால் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் நலன் சார்ந்து அவர்களின் பெயர்களை பிரபல்யம்படுத்தக்கூடிய ஊடகங்களை மாத்திரம் வடிகட்டி அவை தவிர்ந்த ஏனைய ஊடகங்களுக்கு அபிவிருத்தி கூட்டத்தில் அனுமதி மறுப்பது ஊடக சுதந்திரத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் விடுக்ககூடிய ஓர் எச்சரிக்கையாகவும் சவாலாகவும் தான் ஊடகவியலாளர்களால் பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஒட்டுமொத்தமாக ஊடகங்களையும் தடை செய்வது எச்சரிக்கை விடுவது சவாலுக்கு உட்படுத்துவது மோசமான கலாசாரதிற்கு இட்டு செல்கின்ற செயற்பாடு என்ற அச்சம் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக காணப்படும் ஊடகம் ஏன் ஆளுங்கட்சிக்கு சார்பான சில அரசியல்வாதிகளால் அடக்கபடுகின்றது என்ற ஆதங்கத்தையும் ஊடகவியலாளர்கள் எழுப்புகின்றார்கள்.
எது எவ்வாறாக இருந்தாலும் மக்கள் நலன் கருதி உரிமை சார்ந்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களின் கடமை.
இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு மட்டக்களப்பு உரிமை சார்ந்த ஊடகவியலாளர்கள் ஒருபோதும் அடிபணியமாட்டார்கள் என்பது தின்னம் என ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.





இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
