போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்கள்: சஜித்தின் கோரிக்கை
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்கள் குறித்து நாடா ளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவதற்குப் பதிலாக, அவற்றின் மீது சட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கு அறிக்கை வெளியிடத் தேவையில்லை. அவர்களைக் கைது செய்யுங்கள். ஒரு ஊடக நிறுவனம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தால், சட்ட நடவடிக்கை ஆரம்பியுங்கள்,"
மேலும், ஜனாதிபதி மக்களுக்கு பொய்யான நம்பிக்கைகளையும் வாக்குறுதிகளையும் அளித்துவிட்டு, பதிலளிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தில் வெறும் நாடகங்களை அரங்கேற்றுவது பயனற்றது என்று கூறிய அவர், மக்கள் தீர்வுகளையே எதிர்பார்க்கிறார்கள், எதிர்க்கட்சி பாணியிலான அரசியலை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிப்பதற்குப் பதிலாக, "பழைய தேர்தல் முறைமையைப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்," என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |