வட -கிழக்கில் இந்திய -அமெரிக்காவின் தலையீடுகள்! தேரர் கிளப்பும் சர்ச்சை
மாகாண சபை தேர்தல் எதிர்வரும் காலங்களில் நடைபெற்றால்,தேர்தல் நடைபெற்று முடிந்த அடுத்த நாள் வடக்கு கிழக்கில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தலையீட்டில் மீண்டும் பிரிவினைக்கு சார்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
சங்க நாயக்கர்களின் மாநாட்டிக்கு முன் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர்,
வரதராஜ பெருமாள் அன்று என்ன செய்தார்
அன்று 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு முதல் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சரான வரதராஜ பெருமாள் செய்ததை நினைவில் கொள்ளவும்.அவர் அன்று தனிமனிதனாக செய்ததை எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது.
பிரிவினைக்காக இதை நாம் வழங்கவில்லை என சொல்லக் கூடிய தலைவர்கள் இருந்தனர். ஆனால் இன்று பிரிவினை வாதத்திற்கு சார்பான மனதை கொண்டவர்கள் இருப்பதால் இதை இலகுவாக கொண்டு செல்லலாம்.

அதற்கு பல நிதர்சனங்களை இன்று நாம் காண்கிறோம். அண்மையில் பிரதமர் எங்களிடம் கேட்டா யுத்தம் செய்தீர்கள் என்று கூறியுள்ளார்.அவர் எமது வலாற்றை மறந்து விட்டாரா இல்லை இது அரசாங்கம் முன்னெடுக்கும் பிரசாரமா என கேட்க தோன்றுகிறது.
இந்த நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மற்றும் சிங்கள கிராமத்திலுள்ள மக்களை வெட்டி கொன்றது அவரிடம் கேட்டா செய்தார்கள் என கேட்க வேண்டியுள்ளது.

அதனால் எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலை நடத்தி வடக்கு கிழக்கில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களில் பிரிவினைவாதத்தை விதைக்கும் போது அதற்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமான என்பதை நம்பமுடியாமல் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri