தமிழர்களை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையை ஐ.நா பேரவையில் சிபாரிசு செய்ய வேண்டும்! - தர்மலிங்கம் சுரேஷ்
சர்வதேச நாடுகள் தங்கள் நாடுகளின் நலனை மட்டும் முன்னிறுத்திச் செயற்படாமல் இலங்கையில் உள்ள தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான நெறிமுறையொன்றினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு அநீதிகளுக்கு எதிராகச் சர்வதேசத்தின் நீதியைக் கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் ஏழாவது நாளாகவும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே தர்மலிங்கம் சுரேஷ் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் ஏழாவது நாளாகவும் இன்றும் நடைபெற்று வருகின்றது.
இன்றைய போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் நகுலேஸ், ஊடகவியலாளர் சாந்தன், மட்டக்களப்பு மாவட்ட இந்துக் குருமார் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகள் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கச் சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan