தேங்கிக்கிடக்கும் வழக்குகளை வேகமாக விசாரிக்க புதிய பொறிமுறை
இலங்கையில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரணை செய்வதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர், பிரீதி பத்மன் சூரசேனவின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விஜயின் கரூர் பரப்புரையில் திடுக்கிடும் தகவல்கள் பல! அமைச்சர் அமித்ஷா அதிரடி!! கலக்கத்தில் தமிழக அரசு
புதிய பொறிமுறை
இதன்படி, கொழும்பில் உள்ள பதினைந்து மேல் நீதிமன்ற அமர்வுகள், தனித்தனி விடயங்களின் வழக்குகளை விசாரிக்கவுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு மேல் நீதிமன்றம் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் ஒன்பது மேல் நீதிமன்றங்கள் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நீதிமன்றங்கள் வணிக வழக்குகள் மற்றும் சிவில் விடயங்களை கையாளவுள்ளன.மேன்முறையீடுகள், மற்றும் ரிட் மனுக்களை நீதிமன்றம் ஒன்று கையாளவுள்ளது.
இதனை தவிர, பிணை, சிறப்பு கோரிக்கைகள்,சொத்துக்களை முடக்கம், போதைப்பொருள், நிதி மற்றும் ஆவண மோசடி, கொலைகள், கடும் குற்றங்கள் மற்றும் ஹெரோயின் தொடர்பான குற்றவியல் குற்றங்கள் என்பன தனித்தனியான நீதிபதிகளால் விசாரிக்கப்படவுள்ளதாகவும் கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.



