கந்தளாய் பகுதியில் வீட்டில் நடந்த கொடூரம்.. சோதனையில் சிக்கிய நபர்
கந்தளாய் - வென்ராசன்புர பகுதியில் வீட்டில் முள்ளம்பன்றி இறைச்சி வைத்து விற்பனை செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்றைய தினம்(17.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத இறைச்சி விற்பனை
வென்ராசன்புர பகுதியில் உள்ள வீடொன்றில் முள்ளம்பன்றி கொல்லப்பட்டு இறைச்சியாக்கப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கந்தளாய் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, முள்ளம்பன்றியைக் கொன்று இறைச்சியாக்கிய குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், 10 கிலோகிராம் இறைச்சி, மறை கொம்பினால் செய்யப்பட்ட கத்தி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபரை 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 21 மணி நேரம் முன்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri