சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை குறைக்க நடவடிக்கை: டக்ளஸ் தேவானந்தா(Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று (03-05-2023) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி திட்டங்கள்
மேலும் இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.
வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் பிடியில் இருக்கும் விவசாய மற்றும் தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என்றும் காணி பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தபட்ட அமைச்சருடன் பலக்கட்ட பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்றது.
ஜனாதிபதியிடம் இது தொடர்பாக முறையிட்டதை தொடர்ந்து 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
வரைபடத்திக்கு அமைவாக காணி நிர்ணயம் செய்வதற்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின்
பிடியில் இருக்கும் விவசாய மற்றும் தனியார் காணிகள் ஓரிரு மாதங்களில்
விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்தின், செ.கஜேந்திரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், வட மாகாண அமைச்சுக்களின்
செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச
செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸார், இராணுவ அதிகாரிகள் மற்றும்
ஊடகவியலாளர்கள்
எனப் பல்வேறு தரப்பினரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam