யானை - மனித மோதலை தடுக்கும் நடவடிக்கை: சத்தியலிங்கம் விடுத்துள்ள கோரிக்கை
வவுனியா மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் அதிகரித்து இடம்பெறும் யானை - மனித மோதல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18.12.2024) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தனது உரையில்,
“பொருளாதாரத்தில் வவுனியா மாவட்டம் ஏனைய மாவட்டங்களை போலவே, விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு வாழும் விவசாயிகள் யானைகளின் தொல்லையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றார்கள். கடந்த மாதம் எமது மாவட்டத்தில் மாத்திரம் 11 பேர் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி இறந்திருக்கின்றார்கள்.
கூடுதல் ஒதுக்கீடு
கூடுதல் ஒதுக்கீடு ஆகவே எமது பகுதிகளுக்கு யானை வேலி அமைப்பதற்கான நிதியினை அரசாங்கம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கீழ் மல்வத்து ஓயா திட்டம் வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்த திட்ட முன்மொழிவில் யானை - மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மல்வத்தோயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் திட்டப் பிரதேசத்தில் இருந்து யானைகள் ஏனைய பிரதேசங்களிற்கு இடம்பெயரவேண்டிய சூழல் ஏற்படும்.
இதனால் தற்போதுள்ள யானை-மனித மோதல் நிலைமையானது மிக மோசமடையும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
