அம்பாறை மாவட்ட திண்மக்கழிவகற்றல் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் (Video)
எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து திண்மக்கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான நிந்தவூர் பிரதேச சபையின் 52ஆவது கூட்டமர்வு நேற்று(28) சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமர்வில் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் மற்றும் கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் பற்றி உரையாற்றப்பட்டுள்ளது.
திண்மக்கழிவு அகற்றல்
எரிபொருள், எரிவாயு பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளையும் அதனை தொடர்ந்து திண்மக்கழிவு அகற்றல் ஆளணி காரியாலய ஊழியர்கள் சம்பந்தமாக பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த சபை கூட்டத்தில் நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தல் மற்றும் வடிகால்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



