மன்னாரில் ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (24.8.2026) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக, நாட்டு அரிசியின்(நெல்) விலை 120 ரூபாய், சம்பா அரிசியின்(நெல்) விலை 130 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
உரிய நடவடிக்கைகள்
அதேபோல் கீரிச் சம்பாவாக (நெல்) இருந்தால் 140 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2,000 மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைவிட, தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மில் உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 25 மில்லியன் ரூபாய் நிதி வழங்கி, அவர்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் உள்ள நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening