தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலினுக்கு உதவிய யாழ். மேயர்
இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு யாழ். மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட குழுவினர் இன்று அடிப்படை உதவிப்பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவித்த நிலையில், அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம், யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ், க.விஸ்ணுகாந், ஆகியோர் நேரில் சென்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் உடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
