மட்டக்களப்பு மேயர் பொலிஸில்..! விசாரணையில் வெளியான தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடையடைப்பையிட்டு மட்டு நகர் பகுதியை தவிர ஏனைய பல பிரதேசங்களில் கடைகள் திறக்கப்பட்டு வழமை போல மக்களின் இயல்பு வாழ்கை இடம்பெற்ற அதேவேளை நகரில் திறந்திருந்த சில வர்த்தக நிலையங்களை மாநகரசபை முதல்வர் மூடுமாறும் கோரியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் 5 மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
தமிழரசுக் கட்சி ஆட்சியை கைப்பற்றிய
இலங்கை தமிழரசு கட்சி வடக்கு கிழக்கில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி ஆட்சி செய்யும் மாநகரசபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் கடையடைப்புக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து இன்று காலையில் கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, செங்கலடி, ஓட்டுமாவடி, மற்றும் மட்டக்களப்பு நகரை தவிர ஏனைய பிரதேசங்களில் வழமைபோல கடைகள் திறக்கப்பட்டு இலங்கை போக்குவரத்து பேருந்துகள், தனியார் போக்குவரத்து பேருந்துகள் சேவையில் ஈடுபட்டதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள் பாடசாலைகள் இயங்கியது.
அதேவேளை பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டதுடன் பல வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், தமிழரசு கட்சி ஆட்சியை கைப்பற்றிய சில பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பொதுசந்தைகள் மூடப்பட்டிருந்தது.
இருந்தபோதும் மட்டக்களப்பு நகரில் உணவகங்களை தவிர ஏனைய கடைகள் அனைத்தும் காலை 10.00 மணிக்கு திறப்பது வழமையானது. இந்த நிலையில் நகரில் காலையில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் சென்று திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு தெரிவித்தார்.
மாநகரசபை முதல்வர் அரச வாகனத்தை கடையடைப்புக்கு
அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் சென்று கடைகளை மூடவேண்டாம் திறக்குமாறு தெரிவித்து ஏட்டிக்கு போட்டிய இரு கட்சிகளும் செயற்பட்டன.
இந்த நிலையில் மாநகரசபை முதல்வர் வாகனத்தில் சென்று கடைகளை மூடுமாறு தெரிவித்தபோது அங்கு வர்த்தகர்களுக்கும் முதல்வருக்கும் இடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதனையடுத்து வர்த்தகர்கள் மூடுவதா? திறப்பதா? என என்ன செய்வது என தெரியாது திண்டாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் 10.00 மணிக்கு பின்னர் சில வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறந்தனர்.
இந்த நிலையில் மாநகரசபை முதல்வர் அரச வாகனத்தை கடையடைப்புக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தி கடைகளை மூடுமாறும் அல்லது அனுமதி பத்திரம் நிறுத்தப்படும் என வர்த்தகர்களை மிரட்டி அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு தெரிவித்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாநகர சபையின் தேசிய மக்கள் சகத்தி 5 உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து மாநகர சபை முதல்வரை பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
