கொழும்பு வெள்ளப்பெருக்குக்கு மேயரின் அலட்சியமே காரணம் : உடன் பதவி விலகுமாறு வலியுறுத்தல்

Colombo Floods In Sri Lanka Rain
By Rakesh Nov 09, 2026 03:45 AM GMT
Report

கொழும்பு மாநகர சபை மேயர், லண்டன் போன்ற உலகளாவிய நகரங்களின் மேயராகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டு செயற்படுகின்றாரே தவிர, கொழும்பின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்கத் தெரியாதவராக இருக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று(08.11.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எல் நினோ காலநிலை மாற்றம்

அங்கு மேலும் கூறியதாவது, "கொழும்பு மாநகர சபையின் வடிகால் அமைப்பால் 30 முதல் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்க முடியும் என்றும், 129 மில்லிமீற்றர் மழை பெய்தமையாலேயே கொழும்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும் மாநகர நிர்வாகத்தால் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

கொழும்பு வெள்ளப்பெருக்குக்கு மேயரின் அலட்சியமே காரணம் : உடன் பதவி விலகுமாறு வலியுறுத்தல் | Mayor Negligence Reason Flooding In Colombo

கடந்த 1992ஆம் ஆண்டில் 440 முதல் 493 மில்லிமீற்றர் வரையிலும், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமாகவும் கொழும்பில் பலத்த மழை பதிவாகியிருந்தது.

எனினும், கடந்த 32 ஆண்டுகளில் (1992 முதல் 2024 வரை) கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வரலாற்றில் ஒருபோதும் இதுபோன்று நீரில் மூழ்கியதில்லை.

வடிகால்களும் கால்வாய்களும் உரிய முறையில் துப்பரவு செய்யப்படாமல் கழிவுகளால் அடைபட்டுப் போயிருந்தமையே, குறுகிய நேர மழையினால் உடனடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் வடிந்தோட முடியாமல் பல மணிநேரம் வீதிகளில் தேங்கி நின்றதற்கு முதன்மைக்காரணமாகும்.

எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக ஒக்டோபர் இறுதி முதல் நவம்பர் மாத காலப்பகுதியில் கடுமையான மழைவீழ்ச்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற பேரிடர் முகாமைத்துவக் கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். 

கடுமையான போக்குவரத்து நெரிசல்

ஒரு மாநகர சபையின் முதன்மையான பொறுப்பு என்பது நாளாந்தம், வாராந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் குப்பைகளை அகற்றுவது, வடிகால்களைச் சீரமைப்பது, டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் புகை விசிறல் மற்றும் உடைந்த வீதி விளக்குகளைப் பழுதுபார்ப்பது போன்ற அடிப்படைச் சேவைகளை வழங்குவதாகும்.

அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான சுத்தமான மலசலகூடங்கள், ஆடை மாற்றும் இடங்கள் மற்றும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான இடங்கள் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட தற்போதைய மாநகர நிர்வாகத்தால் ஏற்படுத்த முடியவில்லை. 

கொழும்பு வெள்ளப்பெருக்குக்கு மேயரின் அலட்சியமே காரணம் : உடன் பதவி விலகுமாறு வலியுறுத்தல் | Mayor Negligence Reason Flooding In Colombo

தேர்தல் காலத்தில் கொழும்பு நகரை உலகின் மிக நவீன நகரமாக மாற்றுவோம் என்றும், சகல துறைகளிலும் துறைசார் விஞ்ஞானிகள் தம்மோடு இருக்கின்றனர் என்றும் வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது புறக்கோட்டை பஸ் நிலையத்தில் ஒரு கண்காணிப்புக் கமராவைப் பொருத்தி வர்ணம் பூசுவதையும், சிறியதொரு வடிகால் அமைத்ததை முகநூலில் பதிவிடுவதையும் மட்டுமே பெரிய சாதனைகளாக விளம்பரப்படுத்துகின்றனர்.

கொழும்பு மாநகர சபை என்பது பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் கோடிக்கணக்கான குப்பை அகற்றும் ஒப்பந்தங்கள் மூலம் பெரும் வருமானத்தைக் கொண்ட ஒரு செல்வந்த அமைப்பாகும்.

அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறத் தேவையில்லாத அளவுக்கு மாநகர சபைக் கணக்குகளில் பெருமளவு நிதி தேங்கிக் கிடக்கின்ற போதிலும், அதனை மக்கள் நலனுக்காகவும் வடிகால் பராமரிப்புக்காகவும் திட்டமிட்டுச் செலவிட நிர்வாகத்துக்குத் தெரியவில்லை.

இதன் விளைவாகவே மாளிகாவத்தை, புறக்கோட்டை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, திம்பிரிகஸ்யாய மற்றும் ஜாவத்தை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, இரவு 11 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதனால் சிறிய வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள் போன்ற பெறுமதியான உடமைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது“ என்றும் குறிப்பிட்டள்ளார்.

தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம் - பரிதாபமாக உயிரிழந்த தமிழ் குடும்பஸ்தர்

தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம் - பரிதாபமாக உயிரிழந்த தமிழ் குடும்பஸ்தர்

முடங்கவுள்ள இரு முக்கிய அரச துறைகள்

முடங்கவுள்ள இரு முக்கிய அரச துறைகள்

you may like this video


3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US