200ஆவது நாளை பூர்த்திசெய்த மயிலத்தமடு போராட்டம்
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் (01.04.2024) 200ஆவது நாளை பூர்த்திசெய்யும் நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
குற்றச்சாட்டு
இதன்போது, சித்தாண்டி முச்சந்தி விநாயகர் ஆலயத்திலிருந்து கவனயீர்ப்பு ஊர்வலம் ஆரம்பமாகி சித்தாண்டி மகா வித்தியாலயம் வரையில் வருகைதந்ததுடன் அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக அத்துமீறல்களை முன்னெடுத்துவரும் நிலையில், இதுவரையில் அவற்றினை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.
காணி அபகரிப்புகள்
மேலும், அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியபோதிலும் இது தொடர்பில் தமது மேய்ச்சல் தரையினை மீட்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் இங்கு பண்ணையாளர்களினால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான காணி அபகரிப்புகளை தடுத்துநிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் இதுவரையில் எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்காமை கவலையளிப்பதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam