மட்டக்களப்பில் ஓர் இரவில் நடந்த பெரும் துயரம்! கதறி அழும் பெண்கள் (video)
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு - மாதவனை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கும் பட்டிக்குள் இருந்த பொருட்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கதறியழுது தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பண்ணையாளர்களின் மனைவிமார் உள்ளிட்டோர் இன்றைய தினம் (14.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது கணவன்மாரை மயிலத்தமடு - மாதவனைக்கு அனுப்பிவிட்டு எப்படி நாம் கூலியை வாங்கிக் கொண்டு இருப்பது?
கொலை செய்வதற்கான சாத்தியம் நிச்சயமாக இருக்கிறது இரவில் நடந்த சதித்திட்டத்தை பார்க்கும் போது. வாடிகளை தீ வைத்து இப்படியான பிரச்சினைகளை ஏன் உருவாக்குகின்றீர்கள்?
நாம் போராட வரவில்லை, இனக்கலவரத்தை ஏற்படுத்த வரவில்லை, மயிலத்தமடு மேய்ச்சல் தரையை தருமாறு கேட்கவே போராடுகிறோம். இதற்கான தீர்வு கிடைக்காவிட்டால் எமக்கான தீர்வு வரும் வரை நாம் போராடிக் கொண்டே இருப்போம் என தெரிவித்து கதறியழுதுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிவரும் நிலையில் அப்பகுதிகளி்ல் பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், நேற்றையதினம் (14.10.2023) மயிலத்தமடு மாதவனை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கும் பட்டிக்குள் உள்நுழைந்த சிங்கள பேரினவாதிகள் அங்குள்ள பொருட்களை நாசம் செய்து எரித்து விட்டு சென்றுள்ளனர்.
பொருட்களை எரித்து நாசம்
குறித்த பகுதிக்கு அருகில் உழவு வேலை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள் மது போதையில் தமது வாடிக்குள் உள்நுழைந்ததாகவும், தமது உடமைகளை களவாடியும் எரித்தும் சென்றதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தம்மை தாக்கும் விதத்தில் வந்த அந்த கும்பலிடம் இருந்து தாம் தப்பித்து சென்றதாகவும் அவ்வாறு தப்பி ஓடாமல் விட்டால் தமது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல அச்சுறுத்தலின் மத்தியில் கால்நடைகளை மேய்க்கும் தமக்கு நியாயம் கிடைக்காதா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மிருசுவில் படுகொலை: சுனில் ரத்நாயக்க தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு - செய்திகளின் தொகுப்பு (Video)
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri