திருகோணமலையில் கடலுக்கு சென்று மாயமான கடற்றொழிலாளி மீட்பு
திருகோணமலை - பாட்டாளிபும் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் மாயமான கடற்றொழிலாளி மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சீனன் வெளி கடற்றொழிலாளர் சங்கத்தினர் மேற்கொண்ட தேடுதலின் பயனாக இன்று (12-08-2023) மாலை அவர் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த கடற்றொழிலாளி பயன்படுத்திய நங்கூரமறுந்து ஆழ் கடலுக்கு இழுத்துச்செல்லப்பட்ட போது திரும்பி வருவதற்கு எரிபொருளின்றி தவித்த வேளையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த றோலர் படகால் காப்பாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை பாட்டாளிபும் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர் இதுவரை கரை திரும்பாமையால் கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு குறித்த கடற்றொழிலாளியை கண்டு பிடிக்க உதவ வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்றொழிலுக்காக சீனன்வெளியிலிருந்து நேற்றுமாலை (11/08/2023) சென்ற பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற கடற்றொழிலாளி இதுவரை கரை திரும்பாமையினால் அவரது மனைவி பிள்ளைகள் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பிரதேச மக்கள் கோரிக்கை
அத்துடன் இலங்கா பட்டுண கடற்படை முகாமில் இது தொடர்பில் முறையிடப்பட்டுள்ள போதிலும் கடற்படையினரின் ராடரில் எந்தப் பதிவுகளும் இல்லை எனவும் தம்மிடம் தேடுதலுக்கான படகுகளோ வசதிகளோ இல்லை எனவும் அவர்கள் கைவிரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்னமும் தேடுதல் பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
கடற்றொழிலுக்குச் சென்றவர் இதுவரை கரை திரும்பாமையால் உறவினர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
