ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பதிலாக போட்டியிடாமல் இருக்கலாம்-மாத்தளை பிரதி மேயர்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட போவதில்லை என மாத்தளை மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக விமர்சித்தோம்
கடந்த தேர்தலில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசியகட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பதிலாக தேர்தலில் போட்டியிடாமல் இருந்து விடலாம் என மாத்தளை மாநகர சபயின் பிரதி மேயர் அமில நிரோஷன் தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகளுடன் இணைந்து செயற்பட முடியும். எனினும் நாட்டின் இளைஞர்கள் கோரிய அமைப்பு ரீதியான மாற்றத்தை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்பதால் வழங்க முடியாது.
இதனால், புதிய சின்னத்தில் வாக்காளர்களிடம் செல்வது நாகரீகமானது. அரசியல்வாதிகளால் வாக்காளர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துக்கொள்ள முடியாது எனவும் அமில நிரோஷன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 15 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
