தமிழர் நிலத்தை காக்க ஒன்று கூடியுள்ளோம்: மாவை சேனாதிராஜா
தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையிலேயே ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் (Kilinochchi) நேற்று (01.05.2024) இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டும், மதம் அழிக்கப்படும் நிலையிலும், மொழிக்கான உரிமை மறுக்கப்பட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்.
அமைதி போராட்டங்கள்
நிலம், மொழி உள்ளிட்ட விடயத்துக்காக தொழிலாளர் தினத்திலும் பிரகடனங்களாக பகிரங்கமாக முன்வைக்கிறோம்.
இன்றைய மே தின நிகழ்வின் ஊடாக சிதறுண்டுள்ள மக்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுத்துவதாக உணர்கிறேன்.
விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும் விடுதலைக்காகவும் நின்ற மண்ணில் இன்று மே தினம் இடம்பெற்றுள்ளது.
அமைதியாகவும், ஜனநாயக வழியிலும் போராட்டங்களை முன்னெடுக்கவும் அடித்தளமாக மே தின நிகழ்வு அமைந்துள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
