தமிழ் மக்கள் பேரவையின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள்..!
தமிழ் மக்கள் பேரவையின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் நேற்று(1) யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சட்டநாதர் சிவன் ஆலயத்திலிருந்து இளங்கலைஞர் மண்டபம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு ஆரம்பமானது.
தமிழ் மக்களின் நிலைப்பாடு
அதனை தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி. கருத்து தெரிவிக்கையில்,
சிங்கள பெளத்த சிறுபான்மை இடங்களில் அடக்கி ஒடுக்கி நாங்கள் ஒரு பொது அடையாளமாக வாழ வேண்டும் என்று நினைத்து அந்த வேறுபாடுகளை நீக்கி ஒரு அரசியல் கலாச்சாரத்தை முன் கொண்டு சென்று விட்டது ஆனால் சிங்கள தேசம் அந்த பாதையை நிராகரித்தது.

சிங்களதேசம் தனது அடையாளத்தை மட்டும் பாதுகாத்து ஏனையவற்றை அழித்தது..
அது தான் 77 வருசமாக தமிழ் மக்களின் நிலைப்பாடாகும். தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கின்ற நிலமை காணப்படுகிறது. சிலர் இதற்கு துணைபோகின்றனர்.
இதுதான் எமது தேசத்தையே இல்லாமல் செய்வதற்கு காரணமாகிறது. இங்கு நடப்பது இனப்படுகொலை, தந்தை செல்வநாயகம் தலைமைதாங்கி வலியுறுத்திய விடயம் தான் முக்கியமானது அவர் தெளிவாக சொன்னார் எமது இனப்பிரச்சனைக்கு மூல காரணம் ஒற்றையாட்சி முறை அது இருக்கும் வரை தமிழனத்தை மீட்க முடியாது.
தமிழீழ கோரிக்கை
அவரைப்பற்றிய பேசிய ஜி.எல்.பீரிஸ் கூட அதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் தான் பக்குவமான நிதானமான தலைவர், தந்தை செல்வாவின் தமிழீழ கோரிக்கையை நிராகரிப்பதாக பேசியுள்ளார். அவரை நிகழ்விற்கு கூப்பிட்டார்கள் தந்தை செல்வாவின் கொள்கைகளை மறுத்து ஒற்றையாட்சிக்கு துணைபோகும் வகையாகவே செயற்படுகின்றனர்.

தந்தை செல்வாவின் உரை தொடர்பான அழைத்தவர்கள் கூட அவர் பேசிய விடயம் தவறானது என்ற ஒரு கருத்தைக்கூட கூறவில்லை.
நிகழ்வின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி ஜோதிலிங்கம், க.அருந்தவபாலன், பொ.ஐங்கரநேசன், நாவலன், மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டம் யாழ்ப்பாணம் புதிய பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது.
முலவை சந்தியிலிருந்து ஆரம்பமான மே தின பேரணி வைத்தியசாலை வீதியூடாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்து , அங்கு கூட்டம் நடைபெற்றது .
இந்த மேதின பேரணியில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் , ச.ஸ்ரீபவானந்தராசா மற்றும் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி, உள்ளூராட்சி சபைகளின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் , கட்சியின் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்து கொண்டு விசேட உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேதின செய்தி
தமிழ்த் தேசியப் பேரவையின் மேதின செய்தி தருமலிங்கம் சுரேஸ் அவர்களால் வாசிக்கப்பட்டது
இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரமானது சிங்கள பௌத்த பேரினவாதிகளது கைகளுக்குச் சென்றதிலிருந்து அவ் அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தமிழர் தேசத்திற்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிபானது 77 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழர் தேசத்தின் இருப்பை இனவழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் இனவழிப்பு யுத்தம் மூலம்; மௌனிக்கச் செய்யப்பட்டது.
ஆனாலும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காது தொடர்ந்தும் உறுதியாகப் போராடி வருகின்றார்கள். தமிழ்த்தேச மக்கள் ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஓர் தீர்வை 77 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும்கூட, ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியுமே ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.
அவ்வாறு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையை பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பானது, 2015 - 2019 வரையான காலப்பகுதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ரணில் - மைத்திரி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ வரைபுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்த நிலையில், தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் நேரெதிரான அந்த வரைபையே தாமும் இறுதிப்படுத்தி நிறைவேற்றப்போவதாக தற்போதய அனுரகுமார திசாநாயக்க அரசாங்கமும் அறிவித்து, அந்த அரசியல் யாப்பு வரைபினைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் தற்போது நடைபெற்றது.
குறித்த மே தின நிகழ்வில் மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தந்தை செல்வநாயகத்தின் பேரன் சந்திரஹாசன் இளங்கோவன் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல்- எரிமலை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri