தொழிற்சங்க பிரச்சினைகளை புறந்தள்ளும் அரசாங்கம்: நாமல் முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டு
தொழிற்சங்கப் பிரச்சினைகளை முன்வைப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கும் நிலைக்கு அரசாங்கம் மாற்றமடைந்துள்ளது.
தொழிற்சங்கங்களின் தோள்மீது ஏறி அதிகாரத்தை கைப்பற்றி தொழிலாளர்களுக்கு அநீதியிழைக்கும் வரலாற்றின் மோசமான அரசாங்கம் இதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மொட்டு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர்
தொழிலாளர் உரிமைகள்
தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர்களின் உரிமைகளை கண்டு கொள்ளாத அரசாக என்பிபி அரசு பதிவாகியுள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்தபோது தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்தியவர்கள். இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் தொழிலாளர்களை மிதித்து அழிக்கும் நிலைக்கு மாறியுள்ளனர்.

இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் தொழிலாளர்கள் சார்பாக பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri