தொழிலாளர் தினத்திலும் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்
கொழும்பில் இன்றைய தினம் சுமார் ஆயிரம் பேரளவிலான சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏனைய தொழில்துறைகளில் உள்ளவர்கள் இன்று விடுமுறையை அனுபவிக்கும் நிலையில், கொழும்பில் சுத்திகரிப்புத் தொழிலாளர் பெருமளவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மே தினக் கூட்டங்கள்
மேதினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று சுமார் 14 மே தினக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
அவற்றில் கலந்து கொள்ள இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொழும்புக்கு வருகை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், கொழும்பு நகரை துப்பரவு செய்யும் பணியில் 1000 பேர் கொண்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஷாஹினா எம். மைஷான் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |