யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு (Photos)
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (21.11.2023) ஆரம்பமாகியுள்ளது.
இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை
இதன்பொழுது, பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான சிவபாதம் இந்திரவதி ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ச்சியாக சிறுவர் சிறுமியர்களால் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை திரைநீக்கம் செய்யபட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்க பெற முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், கொக்குளாய், கருநாட்டுக்கேணி பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21.11.2023) பிற்பகல் 2.30 மணியளவில் கொக்குதொடுவாய் சமூக அமைப்புக்கள், கொக்குத்தொடுவாய் மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த இரண்டு மாவீரர்களின் பெற்றோரான கணபதிப்பிள்ளை பாலசிவராசாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக செய்திகள்: ஷான்
கிளிநொச்சி
மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி - கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில், மாவீரர்களின் நினைவு படத்திற்கு விளக்கேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது.
தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

















சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
