மாவீரர்களை நினைவேந்தியோரை உடன் கைது செய்யுங்கள்: தென்னிலங்கையில் வலுக்கும் குரல்
வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை தற்போதைய அரசு உடன் கைது செய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர(Sarath Weerasekara) மற்றும் உதய கம்மன்பில (Udaya Gammanpila) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், "மரணித்துப்போன பயங்கரவாதிகளுக்கு அநுர அரசு புத்துயிர் கொடுக்கக்கூடாது.
அநுர அரசு
நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தமைக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினத்தையும், மாவீரர் தினத்தையும் பகிரங்கமாக அனுஷ்டிக்கத் தமிழ் மக்களுக்கு அநுர அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மரணித்துப்போன பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி வழங்குவதா தமிழ் மக்களுக்கு அநுர அரசு செய்யும் நன்றிக் கடன்.
தெற்கில் உள்ள மக்கள் அநுர அரசின் தான்தோன்றித்தனமான இந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்.’’ என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
