மாவீரர் நாள் தயார்படுத்தல்கள் யாழில் ஆரம்பம்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான தயார்படுத்தல்கள் வடக்கு - கிழக்கில் ஆரம்பமாகியுள்ளன.
அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில்(Jaffna) தயார்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இன்றையதினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மலர் வணக்கம்
இதன்போது பொது சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி சிரமதானப் பணிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 11 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
