கடலென ஒன்று திரண்ட உறவுகள்: கண்ணீரில் நனைந்த இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்(Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணைப்பாலை பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக அதே இடத்தில் இம்முறையும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வளாகத்திற்கான வளைவு பதாதையில் மாவீரர் என்ற பெயர் பதிக்ககூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்க அமைய அங்கு மாவீரர் துயிலும் இல்ல பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மாவீரர்களின் நினைவுச்சுடர்
இந்த நிலையில் இரணைப்பாலை துயிலும் இல்லத்தில் தங்கள் பிள்ளைகளை நினைவுகூர பெருமளவான மக்கள் இன்று(27.11.2023) மாலை ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை இரணைப்பாலை மாவீரர் துயிலும்
இல்லத்தில் முதல் விதைத்த மாவீரர் இசைஞானியின் தாயார் ஏற்றிவைக்க
தொடர்ந்து சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக நினைவுச்சுடர்களை
பெற்றோர்கள் உறவினர்கள் ஏற்றிவைத்துள்ளார்கள்.
மேலும், மக்கள் தங்கள் உறவுகளின் திருவுருவப்படங்களை வைத்து வணக்கி சுடர் ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு - விசுவமடுவில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்: கண்ணீரில் நனையும் களம் கண்ட மண் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |