தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிஸாரின் கடும் அராஜகம் : கதறியழும் உறவுகள்(Video)
மட்டக்களப்பு - தரவை துயிலுமில்லத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை 27ஆம் திகதியான இன்று உரிமை கோரிய யுத்தத்தில் உயிர் நீத்த வீரமறவர்களை நினைவுகூர்ந்து வடக்கு - கிழக்கு தாயக பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், மட்டக்களப்பு - தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் அஞ்சலி நிகழ்வின் இடையே உட்புகுந்த பொலிஸார் அஞ்சலி நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போது , அங்கு ஒன்று திரண்டிருந்த மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் செ.கஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
துயிலுமில்லத்திற்கு சப்பாத்து கால்களுடன் உள்நுழைந்த பொலிஸார், அங்கு கட்டப்பட்ட கொடிகளை அறுத்து எறிந்ததுடன், தீபங்களையும் பிடுங்கி எறிந்தனர்.
பொலிஸாரின் இந்த அராஜக செயற்பாட்டை எதிர்த்து மக்கள் கூக்குரலிட்டபோதும், நிகழ்வினை குழப்பும் நடவடிக்கை பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பொலிஸாரின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கதறியழுத வண்ணம் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அவர்களது உறவுகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது.