இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல்: கண்டனக் குரல் எழுப்பும் யஸ்மின் சூக்கா

Norwegian Council of Eelam Tamils Sri Lankan Tamils Tamils Sri Lanka Politician Sri Lankan political crisis
By Thulsi Nov 27, 2023 09:43 AM GMT
Report

இலங்கை அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்பானவர்கள் தொடர்பில் எவ்விதமான பொறுப்புக்கூறலையும் செய்யாமல் உள்ளது என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)

தமிழர் விடுதலைப் போராட்டம்

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009 மே மாதத்தில் உள்நாட்டுப்போரின் முடிவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்பானவர்கள் தொடர்பில் எவ்விதமான பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமையானது. இலங்கை  தண்டனையிலிருந்து விலக்களிப்பு மேலும் அதிகரித்துள்ளதையே காட்டி நிற்கின்றது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல்: கண்டனக் குரல் எழுப்பும் யஸ்மின் சூக்கா | Maveerar Day And Tamils Issues In Srilanka

போர் முடிவடைந்திருந்தாலும்  இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறையானது தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் மட்டுமல்லாது, கூட்டுவாழ்வு  பாரம்பரியம்  நம்பிக்கை ஆகியனவற்றைக் கட்டியெழுப்பும் சமூகக்கட்டமைப்பையும் சிதைக்கின்றது.

நவம்பர் 27ஆம் திகதி தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்தவர்களை நினைவு கூருவதற்கும் கவலை கொள்வதற்கும் தமிழ் குடும்பங்களுக்கு இருக்கும் நியாயமான உரிமைகளை இலங்கை அரசு தொடர்ந்தும் மீறிவருகின்றது.

2014ஆம் ஆண்டு முதல்  ஆண்டுதோறும், சித்திரவதைகளிலிருந்து உயிர்தப்பி  வெளிநாடுகளுக்குத் தப்பிவந்தவர்களின் வாக்குமூலங்களை எனது நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது.

இலங்கை  புலனாய்வு அமைப்புக்கள் வடக்குக் கிழக்கில் நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைப் படம்பிடித்து  பின்னர் அவர்களிடம் சென்று அவர்களை அச்சுறுத்தியுள்ளன.

19 வருடங்களின் பின்னர் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தின வளைவு (video)

19 வருடங்களின் பின்னர் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தின வளைவு (video)

அரச ஆதரவு வன்முறை

2022 நவம்பரில் வடக்கிலுள்ள கல்லறையொன்றில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஒருவரை நாங்கள் நேர்காணல் கண்டபோது, புதிய ஜனாதிபதி இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதை அனுமதித்திருந்தமையால் உரையாற்றுவது பாதுகாப்பானது என்று தான் எண்ணியதாகத் தெரிவித்தார்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல்: கண்டனக் குரல் எழுப்பும் யஸ்மின் சூக்கா | Maveerar Day And Tamils Issues In Srilanka

ஆனால், ஓரிரு நாட்களின் பின்னர் அவரது கருத்துச் சுதந்திரத்தையும், நடமாடும் சுதந்திரத்தையும் மீறும் வகையில்  அவர் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் தன்னுடைய புதிதாகப் பிறந்த குழந்தையையும் செழிப்பாக நடந்த வியாபாரத்தையும் கைவிட்டு வெளியேறினார்.

'இந்த நினைவு நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்குவது' யார் என்று விசாரணைகளில் பாதுகாப்புப் படைகள் கேட்கின்றார்கள். இதில் முக்கியமான ஒரு விடயத்தை அவர்கள் தவறவிடுகின்றார்கள். நினைவேந்தல்களை ஏற்பாடுசெய்வதும் அவற்றில் கலந்துகொள்வதும் வெறுமனே எதிர்ப்பினை வெளிப்படுத்தும் செயல்கள் அல்ல  மாறாக இக்கொடூரமான போரில் உயிர்தப்பிய அனைவராலும் உணரப்படும் தனிப்பட்ட துயரங்களின் வெளிப்பாடேயாகும்.

அரச ஆதரவு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டவர்களே; அவர்கள்இ தங்களது அன்புக்குரியவர்களின் காணமல்போதல்கள், சித்திரவதை அல்லது மரணம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களுக்கு மேலதிகமாக, குற்றச்செயல்களில் இறந்துபோனவர்களையும் காணாமற்போனவர்களையும் தொடர்ந்து நினைவுகூருவது தங்களது தார்மீக மற்றும் சமூகப் பொறுப்பென உயிர்தப்பியவர்கள் கருதுகின்றார்கள்.

உயிர்தப்பிச் சாட்சியங்கள்

நவம்பர் 27இல் வெறுமனே அவர்களது குடும்பங்களும் நண்பர்களும் மட்டுமன்றி  மாறாக முழுச் சமூகமே அவர்களின் தியாகங்களையும் கூட்டுத் துன்பத்தையும் நினைவுகூருகின்றது. உயிர்தப்பி வெளிநாடுகளுக்கு வந்த தமிழர்கள் பொது இடங்களிலும் தனியாகவும் இறந்தவர்களை நினைவு கூருவதற்கான தங்களது உரிமையினை மீளவும் பெற்றுக்கொள்வதை பல ஆண்டுகளாக நாம்  கண்டிருக்கின்றோம்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல்: கண்டனக் குரல் எழுப்பும் யஸ்மின் சூக்கா | Maveerar Day And Tamils Issues In Srilanka

இந்தச் செயற்பாட்டில் உயிர்தப்பி  சாட்சியங்களாக இருப்பதன் நிதர்சனத்துடன் அவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எதிர்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தாங்கள்பட்ட தனிப்பட்ட துன்பங்களை மட்டுன்றிஇ தங்களது சமூகங்களது துன்பங்களதும் நினைவுகளையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக புதிய வழிகளைத் தேடிக்கொள்கின்றார்கள்.

எந்தவொரு அடக்குமுறையும் இறந்தவர்களை நினைவு கூருவதற்கான மனிதனுடைய தேவையை, குறிப்பாக அது உங்களது பிள்ளையாவோ அல்லது பெற்றௌராகவே இருக்கும்பட்டத்தில்இ அடக்கிவிடப்போவதில்லை. போர் முடிந்தபின்னர், பூசாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது சிறைக்காவலர்கள் பழிவாங்குவாங்குவார்கள் என்பதை முழுமையாகத் தெரிந்திருந்தும்  நவம்பர் 27ஆம் திகதி அதிகாலையில் எழுந்து மெழுகுதிரி ஏற்றியதாக சித்திரவதையிலிலிருந்து உயிர்தப்பிவந்த ஒருவர் விபரித்தார்.

இருப்பினும் அவர்களிடம் எஞ்சியிருக்கும் கடைசி சுயமரியாதை அதுவாகவே இருந்ததுடன், அதற்கான அந்த விலையைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றினை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசுகின்றார்.

சர்வதேச கண்காணிப்பாளர்

போரில் உயிர் தப்பியவர்கள் அவர்களுக்கிருக்கும் வருத்தப்படுவதற்கான உரிமையைக் கூட பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ள  நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்வதன்மூலமாக தங்களது மனவலிகளுக்கு ஆறுதல் தேடக்கூட முடியாதுள்ள சூழ்நிலையில்  இவ்வாறான ஒரு அமைப்பில் உயர்தப்பியவர்கள் கலந்துகொண்டு  தங்கள் வாக்குமூலத்தை வழங்குவது சாத்தியமல்ல.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல்: கண்டனக் குரல் எழுப்பும் யஸ்மின் சூக்கா | Maveerar Day And Tamils Issues In Srilanka

உண்மயை கண்டறியும் ஆணைக்குழு நம்பகரமானதாகச் செயற்பட்டு  வெற்றியடையவேண்டுமாக இருந்தால்  அரச ஆதரவுடன் நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதுடன்  நவம்பர் 27ஆம் திகதி நடைபெறும் நிகழ்வுகளைப் பாதுகாப்புப் படைகள் கண்காணிக்காது விடுவதுடன் என்பதுடன்  இவற்றை ஏற்பாடுகள் செய்பவர்கள் அல்லது பங்குபற்றுபவர்களுக்கு எதிராக எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையும் இருக்கவும் கூடாது.

இந்த அடக்குமுறையைக் கண்டு இராஜதந்திர சமூகம் அமைதிகாக்காது இருப்பதுடன். சாதாரண உடைகளில் வரும் அதிகாரிகள் புதைப்படங்கள் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களையும் அனுப்பவேண்டும் என்றுள்ளது.

யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக் கோரிய பொலிஸார்: நீதிமன்றத்தால் மனு நிராகரிப்பு

யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக் கோரிய பொலிஸார்: நீதிமன்றத்தால் மனு நிராகரிப்பு

மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US