வடக்கில் இடம்பெற்ற மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் நிகழ்வு
மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலுமில்லங்கள்
இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம்
மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்.தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனுஷ்ட்டிக்கப்படுவது வழமை.
அந்தவகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் தயாராகி வருகிறது.
செய்தி தீபன்
கொடிகாமம்
மேலும், கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் முதன்மைச்சுடரை நான்கு(4) மாவீரர்களின் சகோதரரான சி.சிவநேசன் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
செய்தி - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |