ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை : வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Anura Kumara Dissanayaka President of Sri lanka Sri Lanka Parliament Election 2024
By Benat Nov 21, 2024 07:02 AM GMT
Report

அடுத்த அமர்வு

ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தபின்னர் அடுத்த அமர்வுக்காக நாடாளுமன்ற அமர்வை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.  

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரியில்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குறை நிரப்பு பிரேரணை எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன்,  வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்றும், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.


இரு தரப்பு கடன் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதான கடன் வழங்குநர் நாடுகளுடன் பிரத்தியேக ஒப்பந்தம் வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினார். '

Clean Sri Lanka கருத்திட்டத்துக்காக விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும்.  சிறந்த மாற்றத்துக்கு அரசியல் கட்டமைப்பு மாற்றமடைவதைப் போன்று, சமூக கட்டமைப்பும் மாற்றம் பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.  

மக்களுக்கு நன்றி..

தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார்.  

தற்சமயம் நாடாளுமன்றத்தில் ஆற்றி வரும் தமது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.

மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் நாடாளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த நாடாளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி  இதன்போது கூறினார்.  


ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கொள்கை பிரகடன உரை தற்போது நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இன்று முற்பகல் ஆரம்பமாகியிருந்த நிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக அழைத்து வரப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது தனது கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தி வருகின்றார்.



புதிய இணைப்பு

10ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், முதலாவதாக சபாநாயகர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்லவை நியமிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.


சபாநாயகர் - அசோக சபுமல் ரங்வல்ல

சபாநாயகர் அசோக சபுமல் ரங்வல்ல


இதேவேளை, பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

பிரதி சபாநாயகர் - முஹம்மத் ரிஸ்வி சாலி

பிரதி சபாநாயகர் முஹம்மத் ரிஸ்வி சாலி


நாடடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் - ஹேமாலி வீரசேகர

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர


சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக நளிந்த ஜயதிஸ்ஸவும், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   


சபை முதல்வர் -  பிமல் ரத்நாயக்க

சபை முதல்வர் - பிமல் ரத்நாயக்க


ஆளுங்கட்சி பிரதம கொறடா  - நளிந்த ஜயதிஸ்ஸ

ஆளுங்கட்சி பிரதம கொறடா - நளிந்த ஜயதிஸ்ஸ


எதிர்க்கட்சித் தலைவர்  - சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் - சஜித் பிரேமதாச

இதேவேளை, சபாநாயகர் அசோக சபுமல் ரங்வல்லவினால் நாடாளுமன்றம் ஒரு மணி நேரத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



முதலாம் இணைப்பு

10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையில் அமர்வு ஆரம்பமாகியுள்ளதுடன்,  மிக எளிமையான முறையில் அமர்வு நடத்தப்படவுள்ளமை குறி்ப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.

அவை ஆரம்பிக்கும் போது முதலாவதாக சாபாநாயகர் தெரிவு இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து பிரிதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர்கள் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர். 

இதனையடுத்து புதிய சபாநாயகரால் சபை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்படும். இதனையடுத்து இன்று காலை 11.30 மணியளவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US