மத்தள சர்வதேச விமான நிலையம் : புதிய முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்பார்ப்பு
190 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் கட்டப்பட்டு, 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்த மத்தள சர்வதேச விமான நிலையம், இன்று (2026) வரை 70,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான திரண்ட நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நஷ்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
எனவே, விமான நிலைய செயல்பாடுகள், தரவு மையங்கள், உணவு மற்றும் கேட்டரிங் சேவைகள், மற்றும் விமான பராமரிப்பு சேவைகள் ஆகிய துறைகளை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்துவதற்காக, 'ஆர்வ வெளிப்பாட்டு கோரிக்கைகள்' (EOI) கோரப்பட்டு, அந்த நடைமுறை நிறைவடைந்துள்ளது.
புதிய முதலீட்டாளர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து 'முன்மொழிவு கோரிக்கைகளை' (RFP) பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த ஓராண்டுக்குள் இதற்கான புதிய முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam