இலங்கை அணிக்கு தொடரும் சிக்கல் : T20 தொடரில் இருந்து விலகும் மதீஷ
வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன இடது காலின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, 2026 T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்குப் பதிலாக அணியில் இணைக்கப்படவுள்ள வீரர் குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இலங்கை அணிக்கு பெரும் சவால்
மதீஷவின் இடத்தைப் பூர்த்தி செய்யத் தேர்வாளர்களின் பட்டியலில் இரு வீரர்கள் முன்னிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணி ஏற்கனவே தனது நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவை காயம் காரணமாக இழந்துள்ளது.
வனிந்துவுக்குப் பதிலாக துஷான் ஹேமந்த ஏற்கனவே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது மதீஷ பத்திரனவும் காயமடைந்துள்ளமை, இறுதிச் சுற்றுப் போட்டிகளை நோக்கி நகரும் இலங்கை அணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதேவேளை கடந்த 16 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 உலகக் கோப்பையின் மூன்றாவது போட்டியில் மதீஷ பத்திரன காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam