நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி : இந்தியாவுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி
சுற்றுலா நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதலாவது டெஸ்ட் போட்டியை போன்று சிக்கல் நிலையை எதிர்கொள்கிறது.
இந்தப்போட்டியின், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது, நியூஸிலாந்து அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக அந்த அணி தமது முதலாம் இன்னிங்ஸில் 259 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பந்துவீச்சுக்கு சாதகமான களம்
எனினும் இந்திய தமது முதல் இன்னிங்ஸில் 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன் காரணமாக தற்போதைய நிலையில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியை காட்டிலும் 301 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
அத்துடன் இன்றும் நியூஸிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் மேலும் அதிக ஓட்டங்களை எடுக்குமானால் அது இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் இற்கான இலக்கை அதிக சவாலுக்கு உட்படுத்தும்.
எனவே இன்றைய நாளில் நியூஸிலாந்து அணியை குறிப்பிட்ட ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை பூனே ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமான களமாக இருப்பதால், இந்திய அணிக்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டமும் சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |