மாத்தறை சிறைச்சாலையில் திடீரென பரவும் காய்ச்சல்: ஒருவர் உயிரிழப்பு
மாத்தறை சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் திடீரென ஒருவகையான காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலையின் கைதிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (22.12.2023) திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேலும் 8 கைதிகள் நேற்றிரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இதன்படி, மொத்தமாக 16 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து, காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காமினி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிதாக மாத்தறை சிறைச்சாலைக்கு வரவிருந்த கைதிகள், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam