மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மஹோற்சவம்: விஷேட பாதுகாப்பு குறித்து ஆராய்வு
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவத்தின் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகோனுக்கும் மேற்படி தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் பி.தருவானந்தா தலைமையிலான ஏற்பாடு குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
கலந்துரையாடல்
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில், இம்முறை நடைபெற உள்ள மஹோற்சவத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என ஏற்பாட்டு குழுவினரால் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பாதுகாப்பு
இதனால் எவ்வித தடைகளும் இன்றி பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பிலும் விசேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
விஷேடமாக இராணுவம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சருடன் மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன கமகே எட்டாவது கஜபா படையணியின் கேர்ணல் சில்வா உட்பட கோவில் அறங்காவலர் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
