ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்ந்தும் இலங்கையில் அடிப்படைவாத நடவடிக்கைகளில்
ஐ.எஸ். அமைப்பின் முகவர் ஒருவர் சிரியாவில் இருந்தவாறு இலங்கையில் அடிப்படைவாதத்தை போஷித்து வருவதாக பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
கண்டியை சேர்ந்த இந்த நபர் தற்போது சிரியாவில் வசித்து வருகிறார். இவர்கள் ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். அமைப்பினருடன் இணைந்து ஆயுதப் பயிற்சிகளை பெற்றவர் எனவும் ஐ.எஸ். அமைப்பு இவருக்கு இயக்க பெயர் ஒன்றையும் சூட்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நபர் செயற்பாட்டு ரீதியாக இயங்கி வருவதுடன் இலங்கையில் பயங்கரவாத்தை பரப்ப முயற்சித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக இந்த நபருடன் தொடர்பில் இருக்கும் சுமார் 100 பேர் தொடர்பாக தகவல்களும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சஹ்ரான் ஹாசீம் உட்பட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் செயற்பட்டு வந்த காலத்தில், அதாவது ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர், அது குறித்து பாதுகாப்பு அமைச்சு உட்பட பிரதானிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது. சிரியாவில் இருக்கும் நபர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri