கொழும்பு அரசியலில் பாரிய கொந்தளிப்பான நிலைமை
கொழும்பு அரசியலில் பாரிய கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் பல அரசியல் குழப்பங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான ஒருவரும் முன்னாள் அமைச்சர் ஒருவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணையத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.மற்றொரு உறுப்பினருடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய உள்ளார் என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்று வினவிய போது, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, விசேட விடயமாக கருதி அவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக செயற்படும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
