யாழில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோத மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
ஆழியவளை பகுதியில் மணல் மண் சட்டவிரோதமாக அகழப்படுவதாக பொலிஸாருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், தெரியப்படுத்திய போதும் அவர்களால் குறித்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாத்து தருமாறும் மக்கள் கோரிக்கை
நள்ளிரவு நேரம் காவல்களை அமைத்து JCB இயந்திரம் கொண்டு டிப்பர்கள் மூலம் பாரிய மணல் கொள்ளையில் சட்டவிரோத மணல் கடத்தல் காரர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மணல் மேடுகளை அழிப்பதால் கடல் நீர் குடி மனைகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மக்கள் கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படவில்லை
இந்நிலையில், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தமது கிராமத்தை பாதுகாத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |