கௌதாரிமுனையில் மீண்டும் பாரிய மணல் கொள்ளை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் மீண்டும் பாரிய மணல் கொள்ளை தலைதூக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (06.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கின் ஆதரவை கோரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்: போராட்டத்திற்கு பகிரங்க அழைப்பு
போக்குவரத்திற்கு தடை
ஏற்கனவே கௌதாரிமுனை வீதியை வழிமறித்து போக்குவரத்திற்கு தடையேற்படுத்தியுள்ள மணலை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய கனியவளத்திணைக்களம் அனுமதிக்காமையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கனிய வளத் திணைக்கள யாழ்ப்பாண அலுவலக பணிப்பாளர் தனது பெயர் பலகையற்ற வாகனத்தில் இரவு பகலாக அப்பகுதிகளில் நின்று மணல் அகழ்வினை முன்னெடுக்கும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கின்றது.
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் மணல் கொள்ளையை தலைமை தாங்கிய நபரே தற்போது வடக்கிற்கு பணிப்பாளராக அனுப்பட்டுள்ளதால் பரமன்கிராய் மற்றும் கௌதாரிமுனை கிராமங்கள் இல்லாதொழிந்து போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை கனிய வளத்திணைக்களத்தினால் பூநகரியின் பொன்னாவெளி பகுதியில் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்ட முருகைகல் அகழ்விற்கு எதிரான மக்கள் போராட்டம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பாரிய மணல் அகழ்விற்கென வழங்கப்பட்டுள்ள.
இந்நிலையில், அனுமதிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டு மக்களது கிராமங்கள் பாதுகாக்கப்படவேண்டும். தவறுமிடத்து பூநகரி பொன்னாவெளியில் இதே கனியவளத்திணைக்கள பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்படவிருந்த பாரிய முருகைக்கல் அகழ்வு எவ்வாறு தடுக்கப்பட்டதோ, அதே போன்று மக்கள் வீதிகளில் களமிறங்கி பாரிய போராட்டத்தின் மூலம் அரச அலுவலகங்களை முடக்கி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதனை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.” என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
