பாரிய அரிசி மோசடி: ஹொரவப்பொத்தானையில் சம்பவம்
அரச பொது வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வேண்டிய 300,000 கிலோ அரிசி மோசடி செய்யப்பட்டுள்ளது.
லங்கா சதொச களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்ட அரிசி, திருட்டு வழியாக ஹொரவப்பொத்தானையில் உள்ள அரிசி ஆலையொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரிசி ஆலை
இந்த அரிசி சுத்தம் செய்யப்பட்ட பின்னர் உள்நாட்டு உற்பத்தி அரிசியாக முத்திரை இடப்பட்டு சந்தைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.
லங்கா சதொச 300,000 கிலோ அரிசிக்காக அரச பொது வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு பணம் செலுத்தியுள்ளது. ஆனால் அரிசி இருப்பு உண்மையில் அதன் களஞ்சியசாலைகளை சென்றடைந்திருக்கவில்லை.
நஷ்டம்
இந்த அரசி மோசடி மூலம் லங்கா சதொச நிறுவனத்திற்கு சுமார் 60 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பொது வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அரிசி இறக்குமதி திட்டத்திற்கு பொறுப்பான இரண்டு முகாமையாளர்கள் மற்றும் லங்கா சதொச களஞ்சிய முகாமையாளர் ஆகியோர் இணைந்து இந்த அரிசி மோசடியை மேற்கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
