பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட ஊழியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
குருணாகல் - பன்னல, சந்தலங்காவ பிரதேசத்தில் பாரியளவு பணமோசடியில் ஈடுபட்ட கொள்வனவு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட போலி நிறுவனத்தில் ஆடைத் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை ஆண்டுகளில் 18 கோடி ரூபாய் மோசடி செய்தமை தெரியவந்தது.
இந்நிலையில், அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சந்தேக நபர் பிஎம்டபில்யு(BMW) ரக கார்கள், அவ்டி ரக கார் மற்றும் பெஜ்ஜோ ரக ஜீப் ஒன்றை வாங்கியயுள்ளதாக கூறியுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
வைகல பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 110 இலட்சம் ரூபாவிற்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்த அவர், பன்னல நகரில் 9 பேர்ச்சஸ் காணியை 130 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்ததுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட உள்ளதுடன் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 13 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் பாதுகாப்பு பிரிவினரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |